1990ம் ஆண்டு காலப்பகுதியில் குருக்கள்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகளை தோண்டுவது சம்பந்தமான நடவடிக்கைகளின் பிற்பாடு காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த புதைகுழிகள் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யுமாறு ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கடத்தப்பட்ட உறவினர்களில் சிலர் முறைப்பாடுகள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து இப் புதைகுழிகளை தோண்டுவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி அன்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதி மன்றத்தினால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறிப்பாக 1990ம் ஆண்டு ஜுலை மாதம் 12ம் திகதி குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்ட உறவினர்களின் முறைப்பாடுகளை பதிவதற்காக 05ம் திகதியிலிருந்து காத்தான்குடி நகர சபையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது
0 Comments