மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு அருகில் மனித தலையொன்று கிடப்பது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த தலை பண்டாரியாவெளி மாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பகுதியில் கிடப்பதைக் கண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments