Advertisement

Responsive Advertisement

அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் சோதனை மற்றும் கைது நடவடிக்கை தொடரும்!

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக என அறிவிக்கப்பட்டது.
எனினும் நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட நேற்று (23) அறிவித்திருந்தார்.
மேலும், பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments