Home » » இந்தியா தந்திர யோகா வித்யா பீடம் உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக , கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி

இந்தியா தந்திர யோகா வித்யா பீடம் உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக , கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இந்தியா தந்திர யோகா வித்யா பீடம் உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக , கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் இன்று பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடியில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்தியா தந்திர யோகா வித்யா பீட இலங்கை கிளை பொறுப்பாளரும் பயிற்சிக்கான ஆலோசகருமான திருமதி.சுசீலா ராஜா பிரதம வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இன்று வாழ்க்கையில் பல்வேறு துறைகளிலும் எதிர்நோக்கும் சவால்களை சமாளித்து முன்னேற பல புதிய தந்திரோபாயங்களை உள்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்குவதால் தங்களுக்குள் மறைந்து காணப்படும் சுய திறமைகளை அதிகரிக்க முடியம் எனவும் இதற்காக மனந்தெளி நிலைப்பயற்சி சிறந்ததொரு தந்திரோபாயமாக அமையும் எனத் தெரிவித்தார்.


மனித மனமானது எந்த நேரமும் அலைந்து திரியும் தன்மையைக் கொண்டது. சில வேளைகளில் இது தன்னியக்க நிலையில் இயங்கவும் செய்கின்றது. இந்நிலையில் ஒரு நிலைப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. அது தான் எமக்கும் எமது சிந்தனைக்கும் இடைநடுவில் உள்ள இடைவெளியை வெளிக்காட்டி , சிந்தனைகள் முகில் கூட்டங்கள் போல் கலைவதை மளந்தெளி நிலைப் பயிற்சி மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்தியா தந்திர யோகா வித்யா பீடத்தைச் சேர்ந்த திருமதி.தர்மநாயகி ஹரிகரன் , திருமதி.ஜுவனேஸ்வரி தர்மரெட்ணம் , திருமதி.விஜயபரணி ஜயசுதன் ஆகியோரும் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நல்லுபதேசங்களை புரிந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |