Advertisement

Responsive Advertisement

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

 


11-12-2022


(12.12.2022) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுடன் பாடசாலையை திறப்பது தொடர்பில் இன்று (11.12.2022) கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனவே இன்றைய கலந்துரையாடலின் பின்னரே பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


மேலும்



பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை இல்லை!

11-12-2022

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளை நாளை (12) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார்    தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை, அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்தநிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை வழமைபோல நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறத்தல் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் நாளை (12) மீண்டும் திறக்கப்படும் என ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments