மட்டக்களப்பு - கொக்குவில், ஏறாவூர் காவல்துறை பிரிவில் கடந்த 8 நாட்களில் போதைப்பொருட்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக மட்டக்களப்பில் நியமிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விசேட காவல்துறை குழுவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு அருகில் சைக்கிளில் தேன்குழல் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து, கஞ்சா, ஜஸ்,ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
0 comments: