Advertisement

Responsive Advertisement

அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடம் கட்டாய பாடம்


11-12-2022


அனைத்து மாணவர்களும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வேலைச் சந்தையின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடம் கட்டாயமாக்கப் பட உள்ளது.

 . இதற்காக பாடத்திட்டம் விரைவில் திரு த்தம் செய்யப்படும்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும். அடுத்த வருடத்திற்கு சுமார் 1,000 மில்லியன் ரூபா இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களில் திறமையான 15,000 ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொலைதூரப் பாடசாலைகளின் சேவைக்காக நியமிக்கப்படுவார்கள் இதேவேளை சுமார் 9,500 மூத்த ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்குள் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு உள்நாட்டிலும் உலக அளவிலும் பெரும் தேவை இருப்பதாக தெரிவித்த அமைச்சர் பாடசாலைகளை விட்டு வெளியேறும் 75,000 பேருக்கு அடுத்த ஆண்டு பயிற்சி அளிக்க ரூ. 700 மில்லியன் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments