Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு


தற்போது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சையின், அனைத்து விடயதானங்களுக்குமான பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள், தமக்கான இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி, விசேட வைத்தியர் நிபுணர் சமித்த கினிகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், 12 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட 745,000 மாணவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, 16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள், தமது பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று, தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Post a Comment

0 Comments