Advertisement

Responsive Advertisement

கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு- நாடளாவிய ரீதியில் குவிக்கப்படும் ஆயுதம் தாங்கிய படையினர்!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 


அதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களில் பொது அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்

Post a Comment

0 Comments