இலங்கையில் 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்..
இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு கொவிட் தொற்றுடன் தொடர்புபட்ட ‘மிஸ் சி’ Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இது பிற்காலத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், சிறுவர்களிடையே நோய் பரவும் வீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: