Advertisement

Responsive Advertisement

காரைதீவு பிரதேசத்தில் அனர்த்த இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு.





நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குள் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மின்னல் தாக்க அனர்த்தத்தில் வீடு மற்றும் வீட்டு உபகரணப் பொருட்கள் பாதிப்படைந்த காரைதீவு-01, 06 ஆகிய பிரிவுகளினை சேர்ந்த 07 பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான 103,500/- பெறுமதியான காசோலைகளும், 2022 ஜனவரி மாதம் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழை காரணமாக வீட்டு கூரை பாதிப்படைந்த காரைதீவு-01, 11 ஆகிய இரு பிரிவுகளினைச் சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கான கொடுப்பனவாக 20,000/-  பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டது.

அத்தோடு கடந்த 2020 ஆம் ஆண்டு காட்டு யானைத்தாக்கம் காரணமாக சொத்துக்கள் பாதிப்படைந்த காரைதீவு - 07 மற்றும் மாளிகைக்காடு மேற்கு ஆகிய பிரிவுகளினைச்சேர்ந்த 03 பயனாளிகளுக்கான  நட்ட ஈட்டுக்கொடுப்பனவாக 85,000/- பெறுமதியான காசோலைகளும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments