Advertisement

Responsive Advertisement

நாடு முழுவதும் மின்வெட்டு! தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்


மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நேற்று இரவு அதிகபட்சமாக 2,150 மெகா வோட் மின்சார தேவை காணப்பட்டது. இரவு நேரத்தில் அதிகபட்ச மின் தேவை 2,700 மெகா வோட் வரை அதிகரிக்கலாம் என்பதால், அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்கும் நெருக்கடிக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான எரிபொருள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். மற்றொரு காரணம், நீர்மின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளமையாகும்.

Post a Comment

0 Comments