Home » » தேசிய பாடசாலைகளை ஆயிரமாக உயர்த்தும் திட்டத்தின் ஆரம்ப வைபவம் ஜுன் 6 ஆம் திகதி...!!

தேசிய பாடசாலைகளை ஆயிரமாக உயர்த்தும் திட்டத்தின் ஆரம்ப வைபவம் ஜுன் 6 ஆம் திகதி...!!

 


நாட்டில் தேசிய பாடசாலைகளை ஆயிரமாக உயர்த்தும் திட்டத்தின் ஆரம்ப வைபவம் ஜுன் 6 ஆம் திகதி நடாத்துவத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதங்கள் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரதான நிகழ்வு ஊவா மாகாணத்தின் மொரகல, சியம்பலண்டுவ மகா வித்யாலயாவில், ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்விற்கு சமாந்தரமாக ஏனைய 8 மாகாணங்களிலும் ஆரம்ப நிகழ்வுகள் மாகாண ஆளுனர்கள் தலைமையில் நடைபெறுமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதேச அபிவிருத்தி குழுக்கள் அடிப்படையிலும் ஆரம்ப நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன் படி தெரிவுசெய்யப்பட்டுள்ள 755 பாடசாலைகளில் இவ்வாறான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும் 9 பாடசாலைகள் தவிர்ந்து, ஏனைய 746 படசாகளுக்கு ரூபா 2 மில்லியன் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
 
பாடசாலை சுற்றாடலை மேம்படுத்தலுக்கா ஒரு மில்லியன் ரூபாவும், அலுவலக உபகரணங்கள் மற்றும் கற்றல் சாதன கொள்வனவிற்காக ஒரு மில்லியனுமாக இரு மில்லியன் ரூபாய்கள் மொத்தமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |