Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எனது கண் முன்னே அண்ணாவை பொலிஸார் அடித்துக் கொன்றனர்- கதறும் தங்கை!

 


மட்டக்களப்பில் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த  21 வயது மதிக்கத்தக்க சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி வைத்து அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு. இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் தெரிவித்து கதறினார்.

மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணை இடம்பெற்று வருகின்றது.

நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Post a Comment

0 Comments