Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருதில் நடந்த திடீர் பரிசோதனையில் வெளி பிரதேசங்களை சேர்ந்த இருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர் !


 (நூருள் ஹுதா உமர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் இன்று கடற்கரை பகுதியில் திடீர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது 

இதன் போது வியாபார அனுமதிப்பத்திரங்கள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் உரிய காரணங்கள் இன்றி நடமாடியவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர்கள் வெளி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் இதைவிட வேகமாக செயற்படுத்தப்படும் என சுகாதாரத்துறையினரும், பாதுகாப்பு துறையினரும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments