மீரிகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவருமான கொஸ்கொட தாரக உயிரிழந்துள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கொஸ்கொட தாரக விசேட நடவடிக்கை ஒன்றிற்காக மீரிகம, ரேந்தபொல பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர் வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments