லொறியின் சாரதிக்கு யமனாக மாறிய விதியின் ஓரத்தில் நின்ற மரக்கிளை-தும்பங்கேணியில் சம்பவம்
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கோணி பிரதான வீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பெரிய கல்லாறைச் சோர்ந்த 37 வயதுடைய கீர்த்தி-சிறிக்காந்தன் ஒரு பிள்ளையின் தந்தையே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று (26) காலை தும்பங்கேணி வீதியூடாக மண் ஏற்றுவதற்காக சென்ற பெரிய ரக லொறி மரத்துடன் மோதியதனாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன்இ குறித்த லொறியின் சாரதியே இதன் போது உயிரிழந்துள்ளார்.
மரத்தின் கிளையுடன் வாகனத்தின் முன் பக்கம் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்ணாடியை உடைத்து உட்சென்ற கிளை சாரதியின் நெஞ்சில் குத்தியதனாலேயே சாரதி உயிரிழந்துள்ளதுடன் சாரதிக்கு அருகாமையிலிருந்த உதவியாளர் துரதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: