Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாதுகாப்பு செயலாளர் மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம்! சிவில் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

 


பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மட்டக்களப்பு நிலவரங்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர்களுடன் ஆராய்வதற்காக இன்று மாவட்ட செயலகத்தில் விசேட ஏற்பாட்டு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

மேற்படி கூட்டமானது கொரோனா தொற்று தொடர்பாகவும் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பானதுமான கூட்டமாக அமைந்ததாக காணப்பட்டது. இக் கூட்டத்திற்கு சிவில் தரப்பினர்களோ ஊடகவியலாளர்களோ அனுமதிக்கப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.

பாதுகாப்பு செயலாளர் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியிலே உலங்கு வானூர்தி மூலமாக வருகை தந்தது அவதானிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments