இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்த விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டம், பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தின் போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 சி பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கல்கெமன்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை பிரதேச செயலாளர் பிரிவின் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
0 comments: