வத்தளை, கெரவலப்பிட்டியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் மேலும் 68 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் 117 ஊழியர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையின் 49 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை முன்னதாக கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலமே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புகளை பேணிய சுமார் 3000 பேர் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.
0 comments: