Home » » சமூக வலைத்தளங்கள் முற்றாக தடைசெய்யப்படும் மைத்திரி கடுமையான எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் முற்றாக தடைசெய்யப்படும் மைத்திரி கடுமையான எச்சரிக்கை!

ஜனாதிபதி செயலகத்தில், ஊடக பிரதானிகளுடன் இன்று காலை ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சமூக வலைத்தளங்கள் மீதான தடையை இன்று நீக்கவிருந்தேன். ஆனால் நேற்று தவறான கருத்துக்கள் பரவப்பட்டன. இன்று அது பற்றி பேசவுள்ளேன். தீவிரமான கருத்துக்கள் பரப்பபடுமானால் சமூக ஊடகங்களை முற்றாக தடை செய்யவேண்டி வரும் என செய்தியாளர்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது,
சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்புவோரை அடையாளப்படுத்த முடியாவிட்டால் சமூக ஊடங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
அத்தோடு, ஊடகங்களும் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, தவறான விடயங்களை பரப்புவோரை அடையாளப்படுத்த, சமூக ஊடகங்கள் சார்ந்தவர்கள் உதவ முன்வராவிட்டால் இந்நடவடிக்கையை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் சுமூகநிலை தொடர்வதற்கு அனைத்து வகையிலும் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அத்தோடு, விசேடமல்லாத செய்திகளையும் விசேட செய்தியென ஊடகங்கள் தற்போது வெளியிடுகின்றன என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாடளாவிய ரீதியில் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |