Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு - செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சடங்கு உற்சவத்தை முன்னிட்ட கட்டுரை (எஸ்.சபாரெத்தினம் )

தமிழில் எழுந்த ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகார
த்தின் தலைவி கற்புக்கரசி கண்ணகி ஆவார்.பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேர நாட்டிலே (Kerala)
தெய்வமாகிய கண்ணகை மானுடத் தெய்வமாகப் போற்றப்படுகி
றார்.கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள அவள். எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி. மதுரை நகரை தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாகவும், திரிபு பட்ட கதையொன்று நிலவிவரும் அதேவேளை மதுரையை எரித்தபின்னர் கண்ணகி மதுரையின் கிழக்கு வழியாக வெளியேறி வைகைக் கரையோர
மாக நடந்தேசென்று காடு , மலை, பள்ளம் எல்லாம் கடந்து இறுதியாகத்திருச்செங்குன்றம் என்னுமமலையையடந்து
அங்கே பூத்துக்குலுங்கி நின்ற வேங்கை மரநிழலில் அழுத
படியமர்ந்து விரதம் காத்து மதுரையை எரித்தபதின் நான்காம் நாள் இவ்வுலகை நீத்துப் பலரும் காணத்தக்கதாககோவலனுடன்
வானுலகம் எய்தினாள் என்றும் கூறப் படுகிறது.அங்கே வானோர் வடிவில் வந்த கோவலனோடு கண்ணகி தெய்வ விமானமேறி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் முதலில் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றதாம்.
👁 ஏழு கிராமத்தவர் உரிமம் பெற்ற செட்டிபாளையம் கண்ணகை
ஆலயம் *************************
கயவாகு காலத்தில் அதாவது கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது எனப்படுகிறது.அன்றொருநாள் சேரன் செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தான் என்றும் இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும், மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றதாம்.
கண்டியிலுள்ள தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கஜபாகு மன்னன் இந்தியாவின் சேர நாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக் கட்டையாலான விக்கிரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது. ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும். இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட விழாவேயாகும் எனவும் கூறப்படுகிறது.. கண்ணகி வணக்கம், இலங்கையின் இரண்டு, இனத்தவரிடையே (தமிழர். சிங்களவர்) வளர்க்கப்பட்டு வந்தது என்றும் பத்தினி தெய்யோ எனச் சிங்களவர்களால் வழங்கப் பட்டும் வருகிறது. சிலம்புக் காதை பற்றிய பாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர்.
👁 வரலாற்றில் கூறப்படும் கண்ணகை ஆலயங்கள் ;
'ஊர் சுற்றுக் காவியம் '
************************
👀கண்டி அரசன் இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் (1629 - 1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் 'ஊர்சுற்றுக் காவிய'த்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் அங்கணாமைக்கடவை (யாழ்ப்பாண மாவட்டத்தில் அங்கணாக்கடவை) முதலூராகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் .அதில்,கிழக்கிலங்கையின் கண்ணகை ஆலயங்களாக 'பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர்
செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு செல்வமுறு மகிழடித்தீவு முதலைக் குடா அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர் மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே. என பத்து (10) கண்ணகை ஆலயங்களை ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.பின்னர் கிழக்கு மாகாணத்து தம்பிலுவில்,பட்டிமேடு,பாணமை,வீரமுனை,அக்கரைப்பற்று , துறைநீலாவணை,களுவாஞ்சிகுடி,போரதீவு,,ஈச்சந்தீவு,முனைக்காடு,கன்னங்குடா,புதுக்குடியிருப்பு,மண்முனை,வாழைசசேனை,தாளங்குடா,பட்டிப்பளை,ஆரையம்பதி ,ஈச்சந்தீவு,மட்டக்களப்பு,பட்டிப்பளை,விடத்தல் முனை
ஆகிய ஏனைய இடங்களிலும் கண்ணகிக்கு ஆலயங்கள் தோற்று
விக்கப்பட்டு பயபக்தி பேணப் பட்டு வருகின்றது.
👀இதன்படி இந்த ஆலயங்கள் யாவும் 400 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்தன என அறியக்கூடியதாயுள்ளது.
தற்போது மட்டக்களப்பு -பூம்புகார(உப்புக்கரைச்சை.)கண்ணகை
அம்மன்கணணகைஅம்மன்ஆலயமும் பிரசித்தமடைந்துள்ளது.
👁எட்டுக் கிராமத்தவர் உரிமம் பெற்ற செட்டிபாளையம் கண்ணகை
ஆலயம் *************************
ஆரம்பத்தில் செட்டிபாளையும் கண்ணகை அம்மன் ஆலயம்; கிரான்குளம், களுதாவளை, குருக்கள்மடம், மாங்காடு, அம்பிலாந்துறை, பழுகாமம், தேத்தாத்தீவு ஆகிய ஏழு ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை கொண்டிருந்தது.என்பதும் பிற்காலத்தில்பழுகாமம், அம்பிலாந்துறைஎனும் ஊர்கள் பிரிந்து இன்றுவரை ஏனைய 6கிராமங்கள் எல்லாம் சேர்ந்து ஒற்றுமையாக கண்ணகிக்குச் சடங்கு விழா எடுப்பது ஒரு சிறப்பாகும்.'வைகாசித் திங்கள் வருவேனென்று வரிசைக்கியைந்துவிடைகொடு
த்தாரே' என குளிர்த்திப் பாடல் கூறுகின்றதற்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் வரும் வைகாசி மாதப் பூரனைநாளை முன்னிறுத்தி
பிரதானமாகவற்றாப்பளை,செட்டிபாளையம் கிராம கண்ணகி
யம்மன் ஆலயங்களில் சடங்கு வைபவம் இடம் பெற்றுவருகிறது.
'கதவு திறப்பு' என்னும் சம்பிரதாயத்துடன் கண்ணகைக்கு சடங்கு ஆரமபிக்கப்பட்டு தொடர்ந்து 5ஆம்நாளகுளிர்த்திலுடன்முடிவுறும்.
👀    சில ஆலயங்களில்9 நாட்கள் சடங்கு நடை பெறும்.
இக்காலத்தில் ஊர்மக்கள் யாவரும் புலால் ஒறுத்து, விரதம் காத்து,விதைதானியங்களை இடித்தல்,வறுத்தல் தவிர்த்து,
பயபக்தி காப்பர். இறுதி நாடகளில் பெண்கள் உபவாசமிருந்து 7 வீடுகளில் மடிப்பிச்சை ( நெல் )எடுத்துஆலயத்துக்கு உபயமளிப்பதும் இடம்பெறும் .
குளிர்த்திலுடன் சடங்கு நிறைவடைந்ததும் தொடர்ந்து வரும் 8 ஆம் நாள்வரை ஆலயம் அமைதி காத்து 8 ஆம் நாள் சடங்கு அமுது (அன்னதானம்)வழங்கலுடன் நிறைவடையும்.
👀வருடத்தின் வைகாசித்திங்கள் பூரணை நன்னாளில் மட்டும் திருககுளிர்த்தில் சடங்கு விழா எடுத்து வந்தது மரபு வழி வரலாறாகும்.சமீப காலமாக பராசக்தி வழிபாட்டையும் இணைத்து தினப் பூசை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது பெரும் மாற்றமாகும்.
👁 செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மனின் அற்புதங்கள் தொடர்பாக வழங்கப் பட்டுவரும் வரலாற்று கதைகள்:( (எனது அறிவுக்கு எட்டியன மட்டும் )
👀👀👀👀👀👀👀👀🙏🏼🙏🏼🙏🏼👀👀👀👀👀👀👀👀👀
பின்வருமாறு : 1 ) ஆழிக்கடலில் கேட்ட அதிசய ஒலிக்கிணங்க ஆலயத்துக்கு கல் வைக்கப் பட்டதாக என் போன்றோரின் சிறு வயதுக்காலத்தில் ஒரு கதையைக் கேள்விப்படுகின்றோம்.
அது : ஆலய நிருமாணிப்புக்கான கல் வைக்கப்படுவது'
குறிக்கப்பட்டஒருநாளில்ஆழிக்கடலில்ஒரு அதிசய ஒலிஎழுப்பப்
படும் என்றும் அந்த ஒலியைக்கேட்கும் தருணத்தில் ஆலயத்து
க்கான கல் வைக்க வேண்டும்' என்றும் ஒருவரின் கனவில் அம்மன் வந்து கூறியதாகவும் அதன்படி ஆலயத்திலிருந்து கடற்கரை வரையிலும் ஒவ்வொருவர் கூப்பிடு தூரத்துக்கு ஆட்கள்நிறுத்தப் பட்டு - கேட்ட அந்தஒலிக்கமையவே கல் வைக்கப் பட்டதாகவும் கூறுவார். .
2 )போர்த்துக்கேயர்கள்ஆட்சிக்காலத்தில்பிரசித்தமானசைவஆல
யஙகளெல்லாம் இல்லாது ஒழிக்கப் பட்டு வந்த தருணத்தில் இவ்வாலயத்துக்கும் வந்ததாகவும்,
அங்கே ஆலயத்து வளாகத்தில் காய்த்து நின்ற எலுமிச்சம் பழத்திலொன்றைப் பறித்துக் கண்ணில் ஒற்றியதாகவும் அப்போது அந்தப் போர்த்துக்கேயரின் கண் பார்வைமங்கிய
தாகவும் ,இதனால் பயந்த அவர்கள் ஆலயத்தை உடைத்துத் காகற்காமல் விட்டு ஓடியதாகவும் ஒரு கதை உண்டு.
( இது, கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்து
நந்தி புல்லுச் சாப்பிடுமா எனப் போர்த்துக் கேயர்கள் கேட்டபோது அந்தக் கல்நந்தி புல் சாப்பிட்டதாக நம்பப் படும் கால கட்டத்துக் கதையாகும்)
3) 'மாங்கனி குதித்தபள்ளம்'
மட்டக்களப்பு வாவியின் அம்மன் கோவில் துறையை அண்டிய நீர்ப்படுக்கையில் 'மாங்கனி குதித்தபள்ளம்'என்றவொரு மிக
ஆழமான இடம் உள்ளது. இது தொடர்பாகக் கூறப்படும்
கதையின் படி ஆலயத்து சடங்கு காலத்தில் அம்மனுக்கான நேர்த்திக் கடன் தீர்க்கவென ஒரு பக்தரால் வழக்கப் பட்ட தங்கத்திலாலான மாங்கனி களவாடப்பட்டுத் தோணியில் கொண்டு செல்லும் போது அந்த மாங்கனி வாவியில் குதித்து மறைந்ததான ஒரு கதையும் நிலவி வருகின்றது. அந்தத் தங்க மாங்கனி குதித்த இடமே 'மாங்கனி குதித்த பள்ளம்' என இன்றும் வழங்கப் பட்டு வருகின்றது.
4) கண்ணகை அம்மன் சடங்குக்காலத்தில் ஆலயத்துக்கு வருவோர் யாரும் ஆலய வீதியில் உள்ள வெண்மண
லில் வெறுமனே அமர்வதைத்தான் தயார் விரும்புவாராம், அப்படியில்லாது பாயோ வேறு எதுவுமோ விரித்து உட்காருவோர் கனவில் அம்மன் தோன்றி ஏதாவதொரு கோரிக்கையை நிறைவேற்றவேற்றுமாறுகேட்பதுபோன்றகண்கண்டதெய்வ
மாக அம்மன் விளங்கியுள்ளார்.
4 ) எத்தனையோ பக்தர்களின் பயபக்தியுடனான கோரிக்கைகளை அம்மன் நிறைவேற்றிக் கொடுப்பதும் வருடாவருடமாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற குழுமுவதையும் காணலாம்.
5 ) 'இங்க வா புள்ள அந்த மடிப்பிச்சை கொட்டுற இடத்துக்குப் போய் அங்கே வாழை இலைக்கு கீழ பாரு ஒரு சோடிக்காப்பு இருக்கும், அந்தக்காப்பை எடுத்துக்கொண்டு அப்படியே என்ற இந்தக் கையில போட்டுவிடு' என்று ஒரு பெண்தன்னிடம் கனவில் கூறியதாக - தன்னால் பயபக்தியோடு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை சமீபத்தில் ஒரு பெண்
என்னிடம் கூறியுள்ளார்.
6 ) இற்றைக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கோயில் வீதியில் அரங்கேறிய நாட்டுக்கூத்தில் பெண்பாகம் ஏற்று நடித்த என் உறவுக்காரரின் கனவில் தோன்றி 'நீ கட்டி ஆடின
சேலை நல்லாயிருந்தது, அதைக்கொண்டு இங்க கொடு'என்று ஒரு பெண் கூறியதாக எனது அண்ணன் முறையானவர் பயபக்தியோடு கையளித்த சம்பவம் போல மிகப்பல உண்டு.
7) :(இது நடந்தது சுமார் 50 வருடங்கள் முன்னராகும். "அம்மன் குழிர்த்தில் முடிந்த அடுத்த எட்டு (8)நாட்களுக்கு
அம்மன் கோவிலுக்கு யாரும்செல்லக் கூடாது என்பது வழக்காயிருந்ததுதெரியாமல்நான்,என்சகோதரமுறையானவரோடு கோவில் வீதிக்குச் சென்றிருந்தோம்.சற்று வேளையில் எனக்கு ஒரு அசரீரியான ஒலி கேட்டது ;அந்த ஒலியை நான் அதற்கு முன்னர் ஒருபோதும் கேட்டதே கிடையாது,ஆனால் அது ஒரு வெங்கல உடுக்கின் ஒலிதான் என்பதை துல்லியமாக என்னால் உணரக்கூடியதாய் இருந்தது.கோவிலின் மூலஸ்தானத்திலிருந்து அந்த ஒலி என்னைப் படிப் படியாக நெருங்கி வந்தது.அது எனக்கு ஆச்சரியமான பயத்தைக் கொடுத்தது.உடன் ஒரு அவசர வணக்கம் போட்டுக்கொண்டு ஓட்டமாக வெளியேறினேன்.
'சடங்கு முடிவுற்றதும் யாருமே கோயில் எல்லைக்குள் வரக்கூடாது என்ற நியதியை மீறி ஏன் வந்தீர்கள் ?' என்ற அமானுஷ்ய எச்சரிக்கையாகவே அதை நான் கொண்டேன்.
😎 தமிழ் இயக்கங்கள் தீவிரமாக தலை கால் தெரியாது நிலை கொண்டிருந்ததருணம் அரச படையினரோடுறவாடிய ஒரு இயக்கத்தின் உறுப்பினன் கொண்ட தவறான கருதுகோள் காரணமாக - அம்மனின் பக்தை ஒருவரின் மகனுக்கு கெடு விதித்த மரணஅச்சுறுத்தல் விடுக்கப் பட்டிருந்தது. (குறித்த நபர் அந்தப் பக்தையின் மகனின் முன்னாள் மாணவனுமாவார்).பக்தை மனமுருகி தனது பசுக்கன்று ஒன்றை நேர்த்திக் கடனாக்கி
அம்மனை வேண்டியதற்கிணங்க அவன் விதித்த கெடு
நெருங்குமுன்னரே அந்த இயக்கத்து நபரின் முடிவை எதேச்சையாகத் தீர்மானித்து உதவினார் அம்மன்.(பக்தை என் தாய் ).
9) செட்டிபாளையத்துக்குப் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரபலர்அம்மன் ஆலயத்துக்கு அவர் ஊர் சார்ந்த 'அங்கத்தவராக' இருந்து வந்தார்.
நிருவாக்கத்தினரோடு கொண்ட மனக்கசப்புக் காரணமாக அவரின் ஊரில் வேறாக ஒரு கண்ணகை அம்மன்கோவிலைக் கட்டி அங்குரார்ப்பணம் செய்த போது திரைச்சீலை பற்றி எரிந்து தீய சகுனம் காட்டியதும் ,
பிரதான வீதியில் இடம்பெற்ற ஒரு அசம்பாவிதத்தைக் காரணம் கொண்டுபடையினரால் அந்த ஆலயக் கட்டடம் இடிக்கப் பட்டதும்இறுதியில் அவர் எங்கே இறந்தார் என்பது தெரியாமல் போனதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
***************************
🙏🏼 மேற்கண்ட விடயங்கள் என்னுடைய சிந்தனைக்கு எட்டியன மட்டுமேயாகும். இதைவிடவும் பலமான அம்மனின் அற்புதங்கள் அநேகரிடம் இருக்கும். கண்கண்ட தெய்வமாக குறித்த ஆறு கிராம மக்களால் நம் பிக்கையோடு பயபக்தியாக வழிபடும் அம்மனின் அற்புதங்கள் உங் களிடமும் இருந்தால் ....எனது செய்திப் பெட்டியினூடாக தொடர்பு கொள்ளுமாறு வாசிப்போரை விநயமாகக் கேட்கின்றேன்
***********************
நன்றிகள் !
----------------
✍🏻கட்டுரைஆக்கம் :
எஸ்.சபாரெத்தினம்
இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்.
தேத்தாத்தீவு.
sabaratnam02@gmail .com
00447454314301

Post a Comment

0 Comments