Home » » பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன

பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன மே மாதம் 06ம் திகதி ஆரம்பிக்கபடுமென ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த நாட்களாக இடம்பெற்று வரும் தாக்குதல்களை முன்னிட்டு நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தேடுதல் நடத்தியதன் பின்னர் பாடசாலைகள் 29ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
எனினும் நாட்டின் நிலைமை இன்னமும் சீராகாத நிலையில் அடுத்த வாரம் 6ஆம் திகதி மீள கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்மாந்துறையில் பொலிஸாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. கடும் மோதல் சம்பவத்தினை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுகள் தயாரிக்கும் நிலையம் ஒன்று உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர்.
அங்கு சென்று சோதனையிட்ட போது, குழுவொன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |