Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிதாக கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின் போது, 3000 ரூபாய் அறவிடப்பட்டு வந்தநிலையில், அந்த கட்டணம் 3500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் சேவைக்காக இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த கட்டணம் 15 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments