Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2020ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் அனைத்தும் பூர்த்தி-விஜயகலா மகேஸ்வரன்


தேசிய வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட நிகழ்வின்போது 2020ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் பிரதமரின் வாக்குறுதிகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்டங்களை வழங்க தாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிளிநொச்சி தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கடந்த 4 வருடங்களாக மந்த கதியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.பல பிரச்சினகளின் காரணமாக கடந்த 4 வருடங்களாக நிராகரிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.(15)

Post a Comment

0 Comments