Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பஸ் வேலை நிறுத்தம்! சில பிரதேசங்களில் பாதிப்பு


தனியார் பஸ் சங்கங்கள் சில நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

எவ்வாறாயினும் பெரும்பான்மையான சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமையினால் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கொழும்புக்கு வெளியே நகர் பகுதிகளில் தூர இடங்களுக்கான பஸ்கள் சில இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டிருக்கவில்லை. குறிப்பாக அலுத்கம , மாத்தறை , கதிர்காமம் , கண்டி , நீர்கொழும்பு வீதிகளில் வழமையை விடவும் குறைந்தளவான பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன. -(3)

Post a Comment

0 Comments