Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை பணிப்பாளராக வைத்தியகலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கம் நியமனம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் இன்று 15/08/2018 சுகாதார அமைச்சினால் நியமனம் பெற்றுள்ளார்.

வைத்திய நிருவாக துறையில் சிரேஸ்டத்துவம் மிக்கவரான அவர் கடந்த ஏழு வருடங்களாக போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி பின் இவ்வருடம் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக நியமனம் பெற்று நேற்றுவரை அங்கு கடமையாற்றி வந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின
 பணிப்பாளர் இப்றாலெப்பை ஓய்வு பெற்று சென்ற நிலையில் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் நியமனம் பெற்றுள்ளார்.

பல சவால்கள் நிறைந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக பல குறைபாடுகளும் நோயாளர்கள் தொடர்பில் சில அதிருப்திகளும் நிர்வாகத்தில் சில முறைப்பாடுகளும் பலரால் தெரிவித்து வந்ததை காணமுடிந்தது.

தற்போது பதவிஏற்றுள்ள புதிய பணிப்பாளர் இவ்வாறான விடயங்களுக்கு முகம் கொடுத்து சேவையாற்றி மக்கள் மனதில் இடம்பிடிப்பார் என நம்புகின்றோம்

Post a Comment

0 Comments