Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனர்த்தங்கள் தொடர்பாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்


எந்தவொரு அவசரகால சூழ்நிலைகளிலும் அது தொடர்பான தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக மத்திய மலைநாட்டில் மேல்கொத்மலை, லக்சபான உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் காற்றினால் 187 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, கண்டி, மட்டக்களப்பு ,யாழ்ப்பாணம்,கொழும்பு பம்பலபிட்டி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் கடும் காற்று வீசியுள்ளது.

மேலும் இந்நிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments