Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள மஹோற்சவத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-05 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும் அடுத்த மாதம் 01 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்- 06 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், நடைபெறும்.
அடுத்த மாதம், 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்- 06 மணிக்கு கார்த்திகை உற்சவமும் 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை- 07 மணிக்கு சூர்யோற்சவமும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும் அன்றைய தினம் பிற்பகல்- 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும் இடம்பெறும்.
செப்ரெம்பர் 05 ஆம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும் பிற்பகல்- 05 மணிக்கு வேல் விமான உற்சவமும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை- 07 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவமும் பிற்பகல்-05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும் 07 ஆம் திகதி பிற்பகல்- 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும் 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை-07 மணிக்குத் தேர்த் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை -07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் மாலை துவஜாவரோஹன (கொடியிறக்க) வைபவமும் இடம்பெறும்.

Post a Comment

0 Comments