Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பெண்களுக்காக வீதியில் இறங்கி போராடிய மட்டக்களப்பு தமிழ் பெண்கள்

நீதிகோரும் சகோதரிகளாக நாங்கள் ஒன்றிணைவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் விவாக விவாகரத்துசட்டத்தினை சீர்திருத்துவதன் மூலமே முஸ்லிம் பெண்களும் சிறுமியர்களும் தினமும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினை கருத்தில்கொள்ளப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 30வருடகாலமாக இந்த திருத்ததினை கொண்டுவருவதற்கு முஸ்லிம் பெண்கள் குரல்கொடுத்துவருவதாகவும் ஆனால் அதனை அரசாங்கம் கருத்தில்கொள்ளாத நிலையே இருந்துவருவதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டது.

இலங்கை பெண்களிடையே பாரபட்சம்வேண்டாம்,மட்டக்களப்பில் சிறுமிகளின் உரிமையை பாதுகாப்போம், முஸ்லிம் விவாக விவாகரத்துசட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவருவோம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.











Post a Comment

0 Comments