தென்னாபிரிக்காவின் கிரஹாம்போர்ட் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதை தொடர்ந்து இனிமேல் இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பதற்கான பயிற்றுவிப்பாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்படலாம் என முன்னாள் அணித்தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்
இலங்கை அணி ஆறு வருட காலப்பகுதியில் தனது ஓன்பதாவது பயிற்றுவிப்பாளரை தேடத்தொடங்கியுள்ள நிலையிலேயே அவரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன
கிரஹாம் போர்ட்டின் பயிற்றுவிப்பு திறமையை கடந்த காலங்களில் புகழ்ந்திருந்த சங்ககார தனது டுவிட்டரில் இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக நியமிப்பதற்கு இனிமேல் எவரும் இல்லாத நிலை காணப்படலாம் என எச்சரித்துள்ளார்.
இதேவேளை சமீபத்தில் இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட அசங்க குருசிங்கவின் பணி குறித்தும் சங்கா கேள்வி எழுப்பியுள்ளார். கிரிக்கெட் முகாமையாளர் என்ற பதவி குறித்து நான் இதுவரை கேள்விப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிரஹாம்போர்ட்டின் விலகல் குறித்து முன்னாள் அணித்தலைவர் மகேல ஜயவர்த்தனாவும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.போர்ட் அற்புதமான பயிற்றுவிப்பாளர் அவர் விலகியது இலங்கைக்கு இழப்பு என மகேல தெரிவி;த்துள்ளார்.


0 Comments