1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள இரண்டு இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் குறித்த முகாம்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அவ்விடத்தில் இருந்து அகற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1995 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிடம் இருந்து யாழ்ப்பாணத்தினை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் பல பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டது.
இதன் பின்னர் 2009 ஆம் விடுதலை புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தற்போது வரையில் ஒரு சில முகாம்கள் அகற்றப்பட்டிருந்த போதும் சில முகாம்கள் இன்றுவரை அகற்றப்படவில்லை.
குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான பண்ணையில் உள்ள காணியினை, சிறுவர்களுக்கான வைத்தியசாலையாக அமைப்பதற்கு மீளளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையிலும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவும் இந்த முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: