Home » » பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு பதவியுயர்வு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக S.மனோகரன் .... ?

பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு பதவியுயர்வு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக S.மனோகரன் .... ?

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாண கல்வித் திணைக்களம், வலயக்கல்வி அலுவலகங்களில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்ய கிழக்கு மாகாணக்கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது.,
இவ்விடமாற்றங்கள் யாவும் மே 15ம் திகதிமுதல் அமுல் செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுனர் அளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம், கிழக்கு மாகாணககல்வித் திணைக்களத்திற்கும், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கும், மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும், மாகாணக்கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த எஸ்.மனோகரன் பட்டிருப்பு வலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இதேபோன்று கல்வி வலயங்களில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களாகவும், உதவிக்கல்விப் பணிப்பாளர்களாகவும் கடமையாற்றும் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் பலரும் குறித்த இடமாற்றத்திட்டத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |