Home » » உலகில் இருந்து அமெரிக்கா துடைத்தெறியப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை

உலகில் இருந்து அமெரிக்கா துடைத்தெறியப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை

தனது தேசம் மீது இரசாயன தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்கா திட்டமிடுவதாக குற்றம்சாட்டியிருக்கும் வடகொரிய அரசாங்கம் இதனை தாங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்றும் உலகில் இருந்து அமெரிக்கா துடைத்தெறியப்படும் என்றும் இன்று சனிக்கிழமை எச்சரித்துள்ளது.
‘சாத்தான்களின் பேரரசன்’ என்று அமரிக்காவை வர்ணித்துள்ள வடகொரியா தனது எச்சரிக்கையை அமெரிக்கா அலட்சியம் செய்யக்கூடாது என்றும் அதன் அராஜகமான இராணுவ முன்னெடுப்புக்கள் அதன் அழிவுக்கு இட்டுச்செல்லும் என்றும் வடகொரிய அரச செய்திப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்துக்கு தயார்செய்யும் வகையில் தென் கொரியாவின் புசான் என்ற துறைமுக நகரத்துக்கு அமேரிக்கா இரசாயன ஆயுதங்களை கொண்டுசென்றிருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் உலகத்தை ஆதிக்கம் செய்யும் தனது காட்டுத்தனமான இலக்கை அடைவதற்கு கொரிய தேசத்தை உயிர் இரசாயன ஆயுதங்கள் மூலம் அழிக்கும் அதன் குற்றத்தனமான செயற்பாடுகள் அம்பலமாகி இருப்பதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
வடகொரியா உயிர் இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக கடந்த சில நாட்களாக கதைகட்டுவதில் மும்முரமாக அமேரிக்கா இருந்ததன் பின்னனியில் வடகொரியாவுக்கு எதிரான ஒரு உயிர் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்துவதற்கான சாக்குப்போக்கை ஏற்படுத்தும் திட்டம் இருந்திருப்பதாக அந்த பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.
South-Korean-military-biochemical-warfar (1)NKOREA
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |