கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு அம்பாறை மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம் திகதி அம்பாறை – போசோன்புர பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவரைக் கொன்றதாக, இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதன்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் அம்பாறை மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது .
இந்த நிலையில் சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments