புதிய அரசியலமைப்பின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு தமது உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய நாடுகள் தொடர்பான பிரித்தானிய அமைச்சர் ஜோய்ஸ் எனேல் மற்றும் சம்பந்தனுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வௌியிட்டுள்ள சம்பந்தன், வடக்கிலுள்ள இராணுவத்தினரால் மக்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயங்கள் குறித்து அரச அதிகாரிகளுடனான சந்திப்பில் பேசுவதாக, பிரித்தானிய அமைச்சர் இதன்போது பதிலளித்துள்ளார் என, எதிர்க்கட்சி அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments: