Advertisement

Responsive Advertisement

தேர்தல் தோல்வி வேதனை அளிக்கிறது: ஹிலாரி

அதிபர் தேர்தலில் கிடைத்த தோல்வி வேதனை அளிக்கிறது என அதிபர் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழத்தி அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேசிய ஹிலாரி தெரிவித்ததாவது:
அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தது வேதனை அளிக்கிறது.
தோல்வியால் ஏற்பட்ட வலி மறைவதற்கு நீண்ட காலம் ஆகும்.
அதிபராக வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு நாட்டின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
நாட்டின் நலனுக்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக டிரம்ப்பிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு ஹிலாரி கூறினார்.

Post a Comment

0 Comments