தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அணுசரணையுடன் சிங்கள,தமிழ் சகோதரத்துவத்துடனான கலாச்சார நிகழ்வு வெல்லாவெளி பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை (8) மாலை வெல்லாவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின இன் நிகழ்வில் வரவேற்பு உரையினை (அபிவிருத்தி உத்தியோகத்தர்) காயத்திரி-ஜனப்பிரியன் நிகழ்த்தினார். பின்னர் தலைமை உரையினை பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் நிகழ்த்தினார். இன் நிகழ்வில் அனைவரையும் மகிழ்விற்கும் வகையில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடன நிகழ்வு நடைபெற்றது.
ஆன்றைய நிகழ்வின் போது குறைந்த வருமானங்களை பெறுகின்ற குடும்பத்தில் உள்ள தமிழ்,சிங்கள மாணவர்களை ஊக்குவிற்கும் வகையில் அந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிற்கப்பட்டனர். இன் நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள்,கலைஞர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர். இறுதியாக கௌசல்யா-குலதுங்க(தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

0 Comments