Home » » கேமரா திருடிய ஜப்பானிய நீச்சல் வீரர் - வெளியேற்றப்பட்டார்!

கேமரா திருடிய ஜப்பானிய நீச்சல் வீரர் - வெளியேற்றப்பட்டார்!

கேமரா ஒன்றைத் திருடியதாகக் கண்டறியப்பட்ட ஜப்பானிய நீச்சல் வீரர் ஒருவர், இன்ச்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆடவருக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் பின்புறமாக நீந்தும் பிரிவில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த ஜப்பானின் நயோயா டோமிட்டா, தென் கொரியப் பத்திரிகையாளர் ஒருவரின் கேமராவை எடுத்து, தனது பைக்குள் போட்டுக்கொண்டது, ரகசிய கண்கானிப்புக் கருவிகளில் பதிவாகியுள்ளது.
“இது அடிப்படையில் நன்னடத்தை விதிகளை மீறிய செயல்” என்று, இன்ச்சியான் சென்றுள்ள ஜப்பானிய அணியின் தலைவரான சுயோஷி அயோகி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, 25 வயதாகும் தவறிழைத்த நயோயா டோமிட்டா, அந்தப் போட்டியிலிருந்து சொந்தச் செலவிலேயே நாடு திரும்ப வேண்டும் என்று ஜப்பானிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சுமார் 7500 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அந்தக் கேமராவை திருடியதற்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம் என ஜப்பானிய அணியுடன் சென்றுள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள். எந்தவொரு ஜப்பானிய விளையாட்டு வீரரும் ஆசியப் போட்டிகளின் போது, இதற்கு முன்னர் இப்படியான ஒரு செயலைச் செய்துள்ளதாக தான் அறிந்திருக்கவில்லை என்று கூறியுள்ள அணியின் தலைவர் அயோகி, இதற்காகத் தாங்கள் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |