Home » » கட்டார் மன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:-

கட்டார் மன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:-

கட்டார் மன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டார் மன்னர் சேக் தமீம் பின் அஹமட் அல் தானி எதிர்வரும் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆராயும் நோக்கில் கட்டார் மன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் விஜயம் செய்திருந்த போது கட்டார் மன்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முஸ்லிம்களை சொந்த சகோதரர்களைப் போன்று நடத்துவதாக ஜனாதிபதி முஸ்லிம் நாடுகளுக்கு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து பல முஸ்லிம் நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக அரச வானொலிச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |