கல்குடா வலயத்திற்குட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்தில் நடாத்தப்பட்ட ஆங்கில தினப் போட்டியின் போது கவிதைப் போட்டியில் கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் இரண்டு மாணவிகள் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் எஸ்.மோனகசுந்தரம் தெரிவித்தார். இந்த வகையில் நடாத்தப்பட்ட ஆங்கில தினப் போட்டியில் இப்பாடசாலையில் இருந்து கவிதைப் போட்டியில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும்; மாணவி பிரபாகரன் அபிஷாகினி கலந்து கொண்டு முதலாம் இடத்தினையும்�� நான்காம் தரத்தில் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி பாலச்சந்திரன் ஹேமி இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
|
அத்தோடு இம்மாணவர்களுக்கான ஆங்கிலத்திலான கவிதையை பாடசாலையின் கல்வி பயிற்றுவிக்கும் ஆங்கில ஆசிரியை திருமதி.வாசுகி லோகிதராஜன் பயிற்றுவித்துள்ளார் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார். அத்தோடு இவர்களுக்கு கல்வி கற்பித்த ஆங்கில ஆசிரியருக்கும்�� கவிதைப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும்�� பாடசாலை சமூகத்தினரின் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும்�� இப்பாடசாலை மாணவிகள் பெற்றி பெற்றமை பாடசாலை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
![]() ![]() |




0 Comments