காணாமல் போனோரை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, ஆணைக்குழுவின் அமர்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நாளை (06) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தலைமையில் நடைபெறவுள்ள இந்த அமர்வில், காத்தான்குடியிலிருந்து ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்தவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் காத்தான்குடியிலும் ஞாயிற்றுக்கிழமை (08) ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்திலும் ஆணைக்குழுவின் அமர்வு இடம் பெறவுள்ளது.
இந்த அமர்வில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முறைப்பாடு செய்தவர்களுக்கு ஆணைக்குழுவினால் அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.


0 Comments