கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் புகையிரத கடவையினால், சுனாமி தாக்கத்தினால் இருப்பிடங்களை முற்றாக இழந்து மீள்குடியேறி வாழும் தாம், பல்வேறு கஷ்;டங்களை எதிர்நோக்கி; வருவதாக, மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராம மக்கள், விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பாதை மூடப்பட்டுள்ளதால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் 15 அல்லது 20 நிமிடங்கள் தாமதித்தே சமுகம் தருவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மூடப்பட்ட கடவைக்கு முன்னால் ஒன்றுதிரண்ட பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பாதையை திறக்குமாறு நேற்று மாலை கோரிக்கைவிடுத்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்;குட்பட்ட, சுனாமி மீள்குடியேற்ற கிராமமான திராய்மடு சுவிஸ் கிராமத்தில,; 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி தாக்கத்தின்போது ஆயிரக்கணக்கான உயிர்களையும் இருப்பிடங்களையும் முற்றாக இழந்த நாவலடி, டச்பாh,; புதுமுகத்துவாரம், திருச்செந்தூர், பாலமீன்மடு உட்பட பல கிராமங்களைச்சேர்ந்த சுமார் 2000 குடுபங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.
இவர்கள் குறித்த சுவிஸ்; கிராமத்திற்குள் நுழையும் பிரதான பாதையில் புகையிரத கடவை அமைந்துள்ளது.இப்புகையிரத கடவையை கடந்த 9 மாதங்களாக புகையிரத நிலைய நிர்வாகம் மூடிவைத்துள்ளது.இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் கிராமம வாசிகள் வரை சுமார் 5 கிலோமீற்றர் சுற்றி வேறு பாதையினூடாகவே தமது கிராமத்திநற்குள் செல்லவேண்டியுள்ளது. இது குறித்து பல அரசியல் தலைவர்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எது வித நடவடிக்கைககளும் எடுக்கப்பகடவில்லையென கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இப்பாதையில் மூன்று அரச பாடசாலைகள், தேவாலயங்கள், வைத்தியசாலை உட்பட பல பொது நிறுவனஙகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 Comments