Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை அட்டாளைச்சேனையில் வாகன விபத்து - ஆறு மாணவிகள் காயம்!

அம்பாறை அட்டாளைச்சேனையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் காயமடைந்துள்ள 06 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டாளைச்சேனை பாலத்தடி வீதியில் மாணவிகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்குள்ளானதால், முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதியுள்ளது. அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளே படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments