Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காலை உணவு உண்ணாமல் 240 மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றனர் - கரடியனாறு மகாவித்தியாலத்தில் துயரம்

கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நாளாந்தம் 240 மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளாமல் வருவதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் கரடியனாறு விஜயத்தின்போதே இதனை தெரிவித்தார்.
மேலும் மக்களுடனான சந்திப்பின்போது பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அக்கிராம மக்களுக்கு வீடு தேவையாக உள்ளது.

 தற்போதும் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தற்காலிக கூடாரத்திலே வசித்து வருகின்ற இவர்கள் ஒரே வீட்டில் திருமண வயது வந்த நான்கு,ஐந்து பெண் பிள்ளைகளுடனும் , சா/த தரம் மற்றும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுடனும் அவ்வீட்டிலே இருப்பதையும் அக்கூடாரமும் பழுதடைந்த நிலையிலே இருப்பதையும் நேரடியாகப் பார்வையிட்டார். 
மேலும் அக்கிராமத்திற்கு மின்சாரம், வீதிகள், தபால் நிலைய கட்டிடமும், வைத்தியசாலைக்கு அருகே பஸ் தரிப்பிடமும் மக்கள் பாவணைக்கு அடிப்படை தேவையாக உள்ளதாகவும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது
பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க கரடியனாறு மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தை புனரமைப்பதற்காக ஜனாதிபதி ஆலோசகரினால் நிதி ஒதுக்கீடும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு கிராம மக்களின் சில அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டதோடு, விவசாயிகளின் கோரிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவத நடவடிக்கையும் எடுக்கப்பட்டது
இம் மக்கள் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளரும், முன்னாள் வவூணதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் கரடியனாறு மகா வித்தியாலய பாடசாலை அதிபர் மற்றும் கிராம சேவையாளர் உட்பட பலர்; இவ்விஜயத்தில் கலந்து கொண்டனர்.

                  
                       

Post a Comment

0 Comments