Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அரசடித்தீவில் மர நடுகை

சுற்றுச்சூழல் தினமானது உலகங்கிலும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு 42-வது உலக சுற்றுச்சூழல் தினம் இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தினை முன்னிட்டு இன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு கிராமத்திலுள்ள தாமரைக் குளத்தினை சுற்றி ஒருதொகை கமுகை மரக்கன்றுகள் கிராம சேவையாளர் திருமதி ச.குகானந்தன் தலைமையில் நடப்பட்டது.
கிராமத்தின் சுற்றுச்சூழல் தலைவர் செயலாளர் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments