சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் ஞானபிரகாசர் இல்லம் 552 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்துள்ளது.
அதிபர் திருமதி உதயரெட்ணம் தலைமையில் கடந்த வியாழக்கிழமை 20.02.2014 சாம்பல்தீவு வில்லியம்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
உடற்கல்வி உதவிக் கல்விபணிப்பாளர் யாக்கும்ஜான் பிரதம அதிதியாகவும். பாடசாலையின் முன்நாள்அதிபர்களான எஸ்.செல்லத்துரை, க.சிவபிரகாசம் ஆகியோர் கௌரவவிருந்தினராகவும் கலந்த சிறப்பித்தனர்.
இப்போட்டியில் நாவலர் இல்லம் 524 புள்ளிகளையும், விபுலானந்தர் இல்லம் 510 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன



0 Comments