மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வானது வித்தியாலயத்தின் அதிபர் திருமதி வீ.வேலாயுதம்பிள்ளை தலைமையில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கடந்த (21) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அருளாலர்களாக ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தாஜீ மகாராஜ், அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் வீ.லவகுமார், விசேட அதிதிகளாக இலங்கை வங்கி முகாமையாளர் என்.அருட்ஜோதி, உதவி கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) குருகுலசிங்கம், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் டேவிட், ஏறாவூர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்கள்.
இந்நிகழ்வினை மேலும் சிறப்பிகுமுகமாக அதிகளவிலான பெற்றோர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், விளையாட்டு ரசிகர்கலென அனைவரும் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.







0 Comments