இன்று பி.ப 2.30 மணியளவில் களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தலைவர் பா. ராதேஸ் அவர்களின் தலைமையில் விளையாட்டு விழாக்கள் ஆரம்பமானது.
இதன் போது பிரதம அதிதியாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களும், விசேட அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம், வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் அவர்களும், கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக கிராமத் தலைவர் அ. கந்தவேள் மற்றும் களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரீ. அபுபக்கர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments