மட்டக்களப்பின் பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒட்டப்பட்டுள்ளன.
இச்சுவரொட்டிகள் கிரான், சந்திவெளி, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, மைலம்பாவெளி, ஆரையம்பதி உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பாதுகாப்பு தரப்பினரால் இந்த துண்டுப்பிரசுரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.
மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments